உலகம்

img

குவைத்திற்குள் நுழைய இந்தியர்களுக்குத் தடை

குவைத்தில் சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், குவைத் அரசாங்கம் அதனை ஆகஸ்டு ஒன்றாம் தேதியன்று மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது.வியாழனன்று காலை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, இரான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களை தவிர பிற நாட்டினர் குவைத்திற்கு பயணம் செய்யலாம் என அந்நாடு தெரிவித்துள்ளது.இதை அறிந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிர்வாக அளவில் இதற்கு தீர்வு காண முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் குவைத் அரசு இந்தியர்கள் தங்கள் நாட்டில் நுழைய தடை விதித்துள்ளது.அதற்கு இந்திய அரசு ,இந்த தடை தற்காலிகமானது என்றும், இது இந்தியர்களின் மீது மட்டும் விதிக்கப்படவில்லை என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவட்சவ் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் இதை சரி செய்வதற்கு முயற்சி செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

;