திங்கள், செப்டம்பர் 21, 2020

உலகம்

img

ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய நியூஸிலாந்து அமைச்சர்

ஆக்லாந்து 
தென்மேற்கு பசிபிக் அமைந்துள்ள குட்டிநாடான நியூஸிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இரண்டாம் நிலையில் உள்ளது. அங்கு இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த  மார்ச் 25ஆம் தேதி  முதல் ஒருமாத ஊரடங்கு உத்தரவை நியூஸிலாந்து அரசு பிறப்பித்துள்ள நிலையில்,  அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் டேவிட் கிளார்க் குடும்பத்துடன் அங்குள்ள ஒரு கடற்கரையில் சுற்றுலா போல் 20 கிமீ  தொலைவுக்குப் பயணம் செய்துள்ளார். இந்த விவகாரம்   பிரதமர் ஜெசிந்தா அர்டரன் பார்வைக்குச் செல்ல டேவிட் கிளார்க்கை இணை சுகாதாரத்துறை அமைச்சராக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு நிலுவையிலிருந்த நிலையில் மலையேற்றம் செய்து சர்ச்சையில் சிக்கப் பிரதமர் எச்சரித்து அனுப்பினார். எச்சரிக்கையைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் ஊர் சுற்றி தற்போது முக்கியமான பதவியை இழந்துள்ளார்.   
 

;