செவ்வாய், செப்டம்பர் 22, 2020

உலகம்

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

அமெரிக்கா விசா பிரச்ச னையால் இந்தியர்கள் பலர் கனடாவை நோக்கி நகர உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 

தெலுங்கானா உள்துறை அமைச்சர் கொரோனா பரிசோதனைக்கு தம்மை உட்படுத்திக்கொண்டார். இதை யடுத்து அவர் ஞாயிறு இரவு ஹைதரா பாத்தின் ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

தமிழகத்தில் முதல்கட்டமாக, 13 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற  திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர் பாக அறிவிப்பு விரைவில் வெளி யாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மிகப்பெரிய ஆன்லைன் நிறு வனங்களில் ஒன்றான அமேசான் 20 ஆயிரம் ஊழியர்களை தற்காலிகமாக வேலைக்கு எடுக்கவுள்ளதாக அறி வித்துள்ளது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதை சமாளிக்கும் பொருட்டு இந்த அறிவிப்பை அந்நிறு வனம் வெளியிட்டுள்ளது.

 

பிளஸ்-2 மாணவர்களுக் கான தேர்வு முடிவுகளை ஜூலை 6 ஆம் தேதி வெளி யிட தமிழக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

 

ஹைதராபாத் மத்திய பல் கலைக்கழகத்துக்கு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது என குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

குற்றாலத்தில் அரியவகை மரத்தை வெட்டிய வழக்கில் இலஞ்சி கிராம  நிர்வாக அதிகாரி நடராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

 

 

 

 

 

;