புதன், அக்டோபர் 21, 2020

இந்தியா

img

திரைக் கலைஞர் சோனு சூட்டிற்கு ஐ நா சபை சிறந்த மனிதநேய செயற்பாட்டாளர் விருது

ஐ நா சபை சிறந்த மனிதநேய செயற்பாட்டாளர் விருதை திரைக் கலைஞர் சோனு சூட்டிற்கு வழங்கி கவுரவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
மத்திய பாஜக அரசின் இந்த எவ்வித முன் ஏற்பாடுகளும் இல்லாத ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங்களில் வேலைக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பமுடியாமல் சிக்கித் தவித்தனர். பலர் பல்லாயிரம் மைல்கள் நடந்தே சென்ற அவலத்தையும் பார்க்க முடிந்தது.
சொந்த மாநிலம் திரும்பமுடியாமல் சிக்கித் தவித்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு திரைக் கலைஞர் சோனு சூட்  பேருந்து வசதி செய்து கொடுத்தும் அவர்களுக்கு உணவு வழங்கியும் பாதுகாப்பாக வழி அனுப்பி வைத்தார், மேலும் ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தது, விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது,  என ஏராளமான  உதவிகளை இவர் செய்துவந்தார். 
இந்நிலையில், சோனு சூட்டின் மனிதநேயமிக்க சேவையை பாராட்டி, ஐ நா சபை சிறந்த மனிதநேய செயற்பாட்டாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளது
இதுகுறித்து சோனு சூட் கூறுகையில், என்னால் செய்ய முடிந்த சிறிய உதவியை மக்களுக்கு செய்தேன். விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இது மிகப்பெரிய கவுரவம்” என்று தெரிவித்துள்ளார்.

;