செவ்வாய், செப்டம்பர் 29, 2020

இந்தியா

img

வன்முறையை தூண்டியவர்களை நோக்கி போலீஸ் வலை விரியவில்லை- உமர்காலித் குற்றச்சாட்டு 

தில்லி கலவரம் தொடர்பாக கடந்த ஞாயிறன்று கைது செய்யப்பட்ட தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித் கைது செய்யப்பட்டார். 
இந்நிலையில் உமர் காலித் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் வன்முறையை தூண்டியவர்களை நோக்கி போலீஸ்வலை விரியவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார். 
2 நிமிடம் 18 வினாடிகள் பதிவாகி உள்ள அந்த வீடியோவில் போலீஸ் மற்றும் டிவி சேனல்களின் கேமரா முன்னிலையில் வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் வன்முறையை தூண்டியவர்களை நோக்கி போலீஸ் வலை விரியவில்லை. அவர்கள் மீது முதல் குற்றப்பத்திரிகை கூட வேண்டாம் கூப்பிட்டு விசாரிக்க கூட இல்லை. 
மாறாக தில்லி போலீஸ் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மற்றும் அரசை விமர்சித்தவர்கள் மீதே வழக்கு தொடர்ந்துள்ளது. இவர்களுக்கு எதிரான சாட்சியங்களே அவர்களில் இடத்தில் இல்லை. என் மீது தவறான குற்றங்களை சுமத்தி தில்லி போலீஸ் கைது செய்ய சில நாட்களாவே காத்திருந்தனர். பிப்ரவரி 17ம் தேதி அமராவதியில் நான் 17 நிமிடங்கள் பேசிய போது கலவரம் வன்முறை என்று பேசவில்லை. சத்தியாகிரகம் அகிம்சை என்றுதான் பேசினேன். இந்த நிலையில் தான் எனக்கு எதிராக பொய் சாட்சிகளை தயாரித்து வருகின்றனர். இங்கு அரசை விமர்சிக்கும் அனைவரையும் சிறைக்குள் தள்ளும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 
இந்த நாடு என்னுடையதும்தான் உங்களுடையதும்தான் என்று பேசியது குற்றமா? அவர்களுக்கு எதிராக பேசியோரை சிறைக்கு அனுப்ப முயற்சித்து வருகின்றனர். எனவே அநீதிக்கு எதிராக குரல் கொடுங்கள் என்ற அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

;