புதன், அக்டோபர் 21, 2020

இந்தியா

img

11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் 11 மாநிலங்களவை உறுப்பினர்களின்  பதவிக்காலம் நவம்பர் மாதம் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் காலியாகும் 11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களுக்கும், உத்தரகண்ட் மாநிலத்தில் 1 இடத்திற்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நவம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 27ஆம் தேதிக்குள் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேட்பாளர்களை தேர்தல் ஆணையம்  அறிவுறுத்தியுள்ளது.  

;