வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

இணையம்

img

வாட்ஸ்அப்பில் பேமெண்ட் வசதி பிரேசிலில் அறிமுகம்

வாட்ஸ்அப்பில் பேமெண்ட் வசதியை முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு அடுத்தபடியாக வாட்ஸ்அப் செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடாகவும் பிரேசில் இருக்கிறது. இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் பேமெண்ட் வசதியை முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் நீண்ட நாட்களாக சோதனை செய்து வந்த பேமெண்ட் சேவையை முதற்கட்டமாக பிரேசில் நாட்டில் வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் வாட்ஸ்அப் சாட் செய்தபடி தனிநபர் மற்றும் உள்ளூர் வியாபாரங்களுக்கு பணம் அனுப்பலாம்.வழக்கமாக வாட்ஸ்அப் செயலியில் புகைப்படம் அல்லது வீடியோ உள்ளிட்டவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவது போன்றே வாட்ஸ்அப் பேமெண்ட் சேவையில் மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 
 

;