வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

இணையம்

img

ட்விட்டரில் வாய்ஸ் ட்வீட் அம்சம் அறிமுகம்

ட்விட்டர் நிறுவனம் அதன் தளத்தில் வாய்ஸ் ட்வீட் பதிவிடும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

ட்விட்டரில், பயனர்கள் பதிவிட விரும்பும் கருத்துகளை அதிகபட்சமாக இரண்டு நிமிடங்களுக்குள் பேசி அவற்றை ஆடியோ வடிவில் பதிவிட முடியும். வாய்ஸ் ட்வீட் உருவாக்க ட்வீட் கம்போசர் ஆப்ஷனை க்ளிக் செய்து கேமரா ஐகானுக்கு முந்தைய வேவ்லெந்த் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். பின் பயனர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ரெக்கார்ட் பட்டனை பார்க்க முடியும். இதில் பயனர்கள் தங்களது வாய்ஸ் ட்வீட் உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு வாய்ஸ் ட்வீட் அளவு அதிகபட்சம் 140 நொடிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயனர் நீண்ட நேரத்திற்கு வாய்ஸ் ட்வீட் செய்ய விரும்பினால், ட்விட்டர் தானாக புதிய வாய்ஸ் ட்வீட் ஒன்றை உருவாக்கி அதனை திரெட் ஆக மாற்றி அடுத்த ட்வீட்டாக பதிவிடும்.

இந்த வாய்ஸ் ட்வீட்களை அனைத்து பயனர்களும் பார்க்க முடியும். ஆனால் இந்த அம்சத்தை ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வாய்ஸ் ட்வீட் பதிவிடும் அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. சில தினங்களில், இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என தெரிகிறது.
 

;