இணையம்

img

டிக்டாக் செயலிக்கு தடை

சென்னை, ஜூலை 19 - சட்டப்பேரவையில் நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டு  பேசிய உறுப்பினர் தமிமுன் அன்சாரி, டிக்டாக் செயலியை தடை செய்ய வலி யுறுத்தினார்.  அதற்கு பதிலளித்த அமைச்சர் தகவல்  தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண் டன், ஒரு செயலியை நீக்கும் உரிமை மத்திய அரசிடம் உள்ளது. எனவே, டிக்டாக்  செயலியை நீக்குமாறு மத்திய அரசுக்கு  கடிதம் அனுப்பியதோடு, மத்திய அமைச் சரிடமும் நேரில் வலியுறுத்தினேன். மீண்டும்  மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பி தடை செய்யப்படும் என்றார்.

;