இணையம்

img

நிலவில் கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவு : அப்பல்லோ 11 பயணம் குறித்து டூடுல் வெளியிட்ட கூகுள்

மனிதன் நிலவில் கால்பதித்து 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, கூகுள் நிறுவனம் அப்பல்லோ 11 பயணத்தை வீடியோ வடிவில் டூடுலாக  வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவுக்கான தமிழ் சப்டைட்டிலை பேச்சு வழக்கில் எழுத்துப்பிழை ஏதுமில்லாமல் கொடுத்திருப்பது மிகச் சிறப்பானதாக அமைந்துள்ளது. 
கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங்கும், எட்வின் ஆல்ட்ரினும் நிலவில் கால் பதித்தனர். அன்று எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்டாடும் வகையில்தான் கூகுள் இந்த சிறப்பு வீடியோ டூடுலை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில், 50 ஆண்டுகளுக்கு முன் அப்பல்லோ 11 என்ற விண்வெளி ஓடத்தை அமெரிக்கா ஏவியது முதல் நீல் ஆம்ஸ்ட்ராங்கும், எட்வின் ஆல்ட்ரினும் நிலவில் கால் பதித்து பூமிக்கு திரும்புவது வரையிலான நிகழ்வை, விண்வெளி வீரர் மைக் கோலின்ஸ் கூறுவது போன்று வீடியோ வடிவில் டூடுள் வெளியிடப்பட்டுள்ளது.

;