அறிவியல்

img

ஆண்களின் உயிரணு உற்பத்தியை பாதிக்கும் கொரோன வைரஸ் - ஆய்வாளர்கள் அச்சம்

கொரோனா வைரஸ் ஆண்களின் உயிரணு உற்பத்தி திறனை பாதிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்
சீனாவில் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கோன்கி மருத்துவ கல்லூரியின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது. விந்தகத்தில் உள்ள உயிரணுக்களை உற்பத்தி செய்யும் விந்துக்குழிகளில் இந்த கொரோனா வைரஸ் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் விந்தணு உற்பத்தி குறையலாம் அல்லது சுத்தமாக உயிரணுக்களே உற்பத்தியாகாமல் போகலாம் என அஞ்சப்படுகிறது. 
இந்நிலையில் கொரோனோ தொற்று பாலுறவின் மூலம் பரவ வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இனப்பெருக்க திரவங்களில் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என்றாலும் ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில் உள்ள செல்கள் வைரஸ்தாக்குதலை ஏற்றுக்கொள்ளத்தக்க ACE2 receptor களை கொண்டுள்ளதால் ஆண்கள் உயிரணு தானம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்க முடியா விட்டாலும் பிற்காலத்தில் அவர்களுக்கு குழந்தை பிறப்பதில் பிரச்சனை இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 
 

;