சனி, செப்டம்பர் 26, 2020

அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய அரசு :- கருணை மனு மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
ச.சா - ஆனா, நீங்க சொன்னாதான அவரு கேப்பாரு..??
 

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ :- வருமான வரித்துறை சோதனைகளில் அரசியல் உள்நோக்கம் இல்லை.
ச.சா - மத்திய அரசுத்துறையோட நோக்கம் உங்களுக்கு எப்புடி தெரிஞ்சுது..?
 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் :- தற்போதைய சூழலுக்குத் தேவையான திட்டங்களை அறிவித்துள்ளோம்.
ச.சா - சூழல் எதுனாவது உங்களுக்குத் தெரியுமா..??
 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் :- எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழக பட்ஜெட் அமையும்.
ச.சா - யாரோட எதிர்பார்ப்புகள்...??

;