வெள்ளி, செப்டம்பர் 25, 2020

அரசியல்

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து

தில்லியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அனஜ் மண்டியில் தொழிற்சாலையில் அதிகாலை நேர்ந்த தீவிபத்தில் 43 உயிர்கள் கருகிய அந்தக் கொடிய செய்தி, கடும் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு உடனடியாக கட்சியின் தோழர்கள் சென்றிருக்கிறார்கள். தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நடந்த விபரங்களை அறிந்திருக்கிறார்கள். இத்தகைய துயரமான விபத்துக்களை தவிர்க்கும் விதத்தில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தில்லி மாநகரம் இருக்கிறது. இதை ஆளும் அரசுகள் புரிந்து கொண்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ் - பாஜகவின் பிரிவினைவாத மசோதாவான குடிமக்கள் குடியுரிமை திருத்த சட்ட மசோதா மீது 2 திருத்தங்களை எமது கட்சி அளித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் பெயர்களை குறிப்பிட்டு அங்கிருந்து வந்து குடியேறியவர்கள், குடியுரிமை மறுக்கப்படுவார்கள் என்று மசோதா கூறுகிறது. ஏன் குறிப்பிட்ட மூன்று நாடுகளின் பெயர்களை சொல்கிறீர்கள்? இந்தியா, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துகிற ஒரு நாடாகும். எந்த மதத்தவர் மீதும் பாகுபாடு கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

;