சனி, செப்டம்பர் 26, 2020

அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் செங்கோட்டையன்:- கல்வித்தரத்தில் குஜராத்தை மிஞ்சி உயர்ந்த இடத்தை தமிழகம் எட்டும்.
ச.சா - என்னாச்சு இவருக்கு... நாலாவது இடத்துல இருக்குற குஜராத்த, ரெண்டாவது இடத்துல இருக்குற தமிழகம் முந்துமா..?
 

அமைச்சர் உதயகுமார் :- நாங்கள் அடிமை அரசுதான்.
ச.சா - எல்லாரும் சொல்றது உண்மைனு இவருக்கும் தெரிஞ்சு போச்சோ..?
 

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் :- டி.என்.பி.எஸ்.சி. விவகாரத்தில் கைதானவர் திமுகவுக்கு நெருக்கமானவர்.
ச.சா - ஒன்பது வருஷமா உங்க ஆட்சிதான... அவர எதுக்கு உங்க ஆட்சில வளர்த்து விட்டீங்க..?
 

செய்தி :- கடந்த நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் வருமானம் அதிகரிப்பு.
ச.சா - இத்தனைக்கும் ஆட்சியாளர்களுக்கு பிடிக்காத பொதுத்துறை..?

;