அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி பிலிப் டேவிட்சன் :- ரஷ்ய ஏவுகணைகளை இந்தியா வாங்குவது எங்களுக்கு பெரும் பிரச்சனை.

ச.சா - உங்க கிட்ட வாங்கணுமோ..?!?
 

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் :- தமிழை வடக்கிலும் பரப்ப முயற்சிக்கிறோம்.
ச.சா - இப்புடி சொன்னா தமிழர்கள் ஏமாந்துரு வாங்கனு யாராவது சொன்னாங்களா..?!?

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் :- அணைகள் பாதுகாப்பு மாநில அரசின் பொறுப்பாகும்.

ச.சா - கேட்டா, நாங்க கடிதம் எழுதிருக்கோம்னு அதிமுக அரசு சொல்லிரும்....!!!!

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் :- அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களில் ஒன்றைப் பிடிக்கும்.
ச.சா - இருக்குறத் தக்க வையுங்க முதல்ல...!!!!

;