சனி, செப்டம்பர் 26, 2020

அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- ரஷ்யாவுக்கு ரூ.7200 கோடி கடனுதவி.
ச.சா - அடுத்த விருது வாங்கத் தயாராயிட்டாரோ..??
 

பாஜக பொதுச் செயலாளர் தருண் சுக் :- பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் பொய்களைப் பரப்புகிறது.
ச.சா - ஓ.. சரிவு மேலும் அதிகமோ..??
 

தமிழக அமைச்சர் காமராஜ் :- ஒரே நாடு, ஒரே ரேஷன் என்ற கொள்கையால் தமிழக பொது விநியோகத்திட்டத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
ச.சா - அத ஏத்துக்கலைனா உங்க ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படுமோ..??
 

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி :- நெருக்கடியில் உள்ள வாகனங்கள் துறைக்கு அரசு உதவும்
ச.சா - எந்த அரசு.. நீங்க அமைச்சரா இருக்கீங்களே, அதுவா..? நெருக்கடியே இல்லைனு சொல்லிட்டு இருக்காங்களே..??

;