சனி, செப்டம்பர் 26, 2020

அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- பொங்கல் பரிசு தருவதை முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்.

ச.சா - உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தத் துவக்குறாரு..!!
 

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா :- மகாராஷ்டிராவில் மக்கள் தீர்ப்பைக் கடத்திச் சென்று விட்டார்கள்.
ச.சா - உங்கள் கடத்தல் முயற்சி தோல்வில முடிஞ்சுருச்சே..??
 

மத்திய அமைச்சர் அமித்ஷா :- வெளிநாட்டுப் பயணங்களின்போது குறைவான எண்ணிக்கையில்தான் அதிகாரிகளை மோடி அழைத்துச் செல்கிறார்.
ச.சா - அதானி மாதிரி பெரு முதலாளிகள் எண்ணிக்கைதான் அதிகமோ..??
 

பாஜக எம்.பி. பிரக்யா சிங் :- பகல் கூட இருளாக மாறிவிட்டது.
ச.சா - உங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்கள்தான இதச் சொல்லணும்..?!!

;