வியாழன், அக்டோபர் 1, 2020

அரசியல்

img

ஊரடங்கு காலமும்... போராடும் நேரமும்... 

ஊரடங்கு காலத்தில்  பேரழிவுச்  சட்டங்கள்
ஊர்வலம்   வருவதைத் தடுத்திட எழுவோம்!
யாரும்இந்     நேரத்தில் எதிர்த்திட  மாட்டார்
என்கின்ற  மமதை, அரசுகள்  சூழ்ச்சிகள்...
போராடிப் பெற்றது தொழிலாளர் வர்க்கம்
புவியினில்   ‘எண்மணி’  வேலை  நேரமாம்…
வாராது   வந்ததைப்  ‘பன்னிரு மணி’யென
வர்க்க   எதிரிகள்   மாற்றிடப்   பொறுப்பதோ?
எழுகவே!  எழுகவே!    செங்கொடி     இயக்கம்!
எழுப்புக   எங்கணும்    எதிர்ப்பின்  முழக்கம்!
விழுகவே  “மோடியம்”, வீறிடும் “செவ்வியம்”!
வீதியில்   இறங்குவோம்!   உரிமைகள் வெல்லுவோம்!
தோற்பது இல்லையே!  துவள்வதும் இல்லையே!
துணிவுகள் நனியுண்டு!  வரலாறு  நமக்குண்டு!
காப்பது   ஒன்றுதான்… பொதுவுடைமை   என்றுதான்
கனலாக     மாறுவோம்!   மீட்போம்நம்  தேசமே!
பொய்யர்கள்  ஆட்சியர் பெருங்கேடு செய்யினும்,
பொய்மைகள்   என்றுமே   நீடித்து  நிலைக்காது!
மெய்யது…   மெய்யது… ‘மாற்றங்கள்   மலர்வது’…
மார்க்சீயப் பாதையே  மானுட ஒளிவிளக்கு!
அய்யங்கள்  இல்லையே !  அச்சங்கள் இல்லையே!
அறிவோமே,   காண்போமே,   அன்பான  புதுவுலகம்!
வையகம்   வாழ்த்துமே!    வாகைகள்   சூடுமே!
வருகவே!  எழுகவே!    செங்கொடி இயக்கமே!

===ந.காவியன்===

;