பல்லுயிர் பெருக்க அழிவை கண்டுகொள்ளாமையால் உலக உணவு உற்பத்தி கடும் அபாயநிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வு அறிக்கையை அடுத்து உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதுமுள்ள வேளாண்மை நிலங்களில் உபயோகிக்கப்படும் இரசாயன உரங்களாலும், நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் வேதியியல் கழிவுகளாலும் உணவு உற்பத்தியில் இயற்கையின் ஒத்துழைப்பு என்பது கடும் அபாய நிலையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு வகையான நிலங்களான காடுகள், புல்வெளிகள், மாங்ரோவ் காடுகள், பவளதிட்டுகள், விவசாய விளை பொருள்களில் ஏற்பட்டுள்ள மரபு ரீதியான மாறுபாடு மற்றும் உயிர்வாழ் இனங்கள் என அனைத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெருங்கடல்களில் மூன்றில் ஒருபங்கு மீன் பிடிக்கும் பகுதிகளில் அளவிற்கு அதிகமான அளவில் அறுவடை செய்யப்பட்டு விட்டன.

கடந்த 20 ஆண்டுகளில் புவி தாவர மேற்பரப்பு உணவு உற்பத்தியில் சுமார் 20 சதவிகிதம் குறைந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கையில் மூலம் தெரியவந்துள்ளது. 63% தாவரங்கள், 11% பறவைகள், 5% பூஞ்சைகள் மற்றும் 5% மீன்கள் அனைத்தும் தனது எண்ணிக்கையில் குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.