டாக்கா,
வங்கதேசத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 70 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் செயல்பட்டு வந்த ரசாயன குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேர் குடியிருப்பில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் டாக்கா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு டாக்காவில் இதேபோன்று இரசாயன பண்டகசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.