லாகூர் : பாகிஸ்தான் நாட்டில் பிஎஸ்எல் என்ற பெயரில் நடைபெற்று வரும் டி-20 தொடரை ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஒளிபரப்பு உரிமையை செய்து வந்தது. புல்வாமா தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனம் பிஎஸ்எல் தொடரில் இருந்து வெளியேறுவதாக திடீரென அறிவித்தது.ஐஎம்ஜி ரிலையன்ஸின் பணி மிக முக்கியமானது என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமாதான பேச்சிற்கு பலமுறை தொடர்பு கொண்டது. ஆனால் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனம் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், பிஎஸ்எல் – ஐஎம்ஜி ரிலையன்ஸ் பிரச்சனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்துள்ள அறிக்கையில், ”பிஎஸ்எல் தொடர் விவ காரத்தில் ஐஎம்ஜி ரிலை யன்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கை மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.விளையாட்டும், அரசியலும் வெவ்வேறு துருவங்கள் போன்றது. இந்தியாவில்பிஎஸ்எல் தொடருக்கு அதிக அளவிலான பார்வையாளர்கள் இருக்கிறார்கள்.ஐஎம்ஜி ரிலையன்ஸ் நடவடிக்கையால் எங்களுக்கு இழப்பு ஏற்படுவது உறுதி.விளையாட்டின் மூலம் இந்தியா – பாகிஸ்தான் இடையே இணைப்பை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்தோம். ஆனால் ஐஎம்ஜி ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயலால் ஏமாற்றமே மிஞ்சியது” என குறிப்பிடப்பட்டுள் ளது.