ஈராக்கில் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் 25 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரே பிரசவத்தில் 6 ஆண் குழந்தைகள், 1 பெண் குழந்தை என்ற 7 குழந்தைகள் பிறந்துள்ளன. பிறந்த குழந்தைகள் அனைவரும் நலமாக உள்ளனர்.
ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் என்பது உலகின் இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கடந்த 1997ல் கென்னி பாப்பே தம்பதிக்கு உலகில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தனர்.