ஒடிசாவின் பாலாங்கிர் நகரில் ரயில்வேக்குச் சொந்தமான இரண்டேகால் எக்டேர் நிலத்தில் நகர்ப்புற மர வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. 3ஆண்டுகளில் மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன. இந்நிலையில், குர்தா – பாலாங்கிர் இடையே ரயில்போக்குவரத்தைத் தொடங்கி வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று பாலாங்கிர் செல்கிறார். மோடியின் ஹெலிகாப்டர் இறங்கு தளம்அமைக்கவும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் ரயில்வே நிலத்தில் ஒன்றேகால் ஹெக்டேர் பரப்பில் நின்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிச்சாய்த்துள்ளனர். இந்த மரங்களை வெட்டத் தங்களிடம் அனுமதி பெறவில்லை என ஒடிசா வனத்துறை தெரிவித்துள்ளது.