மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் ஆலை நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நட வடிக்கைகளை கண்டித்து வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், மேட்டூர் குஞ்சாண்டியூர் பகுதியில் கெம்ப்ளாஸ்ட் என்ற தனியார் ஆலை செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் ஜனவரி 8 ,9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்றனர். இதனால் ஆத்திரமடைந்த தொழிற்சாலை நிர்வாகம், வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதற்காக 94 தொழிலாளர்களையும், தொழிற்சாலையில் சங்கம் சேர்த்ததற்காக 5 தொழிலாளர்களையும் பணிநீக்கம் செய்தது. கெம்ப்ளாஸ்ட் ஆலை நிர்வாகத்தின் இந்த அராஜக உத்தரவை கண்டித்து ஆலை தொழிலாளர்கள் கடந்த ஜன.10 ஆம் தேதி முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், இந்த பணிநீக்க உத்தரவை திரும்பப் பெற தொழிலாளர் நல ஆணையர் அறிவுறுத்தியும் ஆலை நிர்வாகம் அதனை அமல்படுத்த மறுத்து வருகிறது. இதன்காரணமாக திங்களன்று ஐந்தாவது நாளாக தொழிலாளர்கள் ஆலை முன்பு அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தொழிலாளர் நலத்துறையின் அறிவுரையை உடனே அமல்படுத்தி, பாதிக்கப்பட்ட 94 தொழிலாளர் களையும் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைமையில் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கந்தசாமி தலைமை வகித்தார். மாநகர கிழக்கு செயலாளர் வி.பெரியசாமி, மாநகர வடக்கு செயலாளர் எஸ்.சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கணேசன், மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ், மாநில குழு உறுப்பினர் கற்பகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க முன்னணி நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு கெம்ப்ளாஸ்ட் ஆலை நிர்வாகத்தின் அராஜகத்தை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில், தொழிலாளர் நலத்துறையின் அறிவுரையை உடனே அமல்படுத்தி, பாதிக்கப்பட்ட 94 தொழிலாளர்களையும் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைமையில் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு திங்களன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.கந்தசாமி தலைமை வகித்தார். மாநகர கிழக்கு செயலாளர் வி.பெரியசாமி, மாநகர வடக்கு செயலாளர் எஸ்.சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கணேசன், மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ், மாநில குழு உறுப்பினர் கற்பகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க முன்னணி நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு கெம்ப்ளாஸ்ட் ஆலை நிர்வாகத்தின் அராஜகத்தை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.