மதுரை,
அமைச்சர் விஜய பாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றது குறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இரு சக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் நிதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து அபராதம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையில் இரு சக்கர வாகனம் மூலம் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் சென்றார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து டிராபிக் ராமசாமி மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஹெல்மெட் அணியாமல் சென்றது குறித்து டிசம்பர் 17ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: