மதுரை:
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி ஹிட்லரை போல ஒரு பாசிசவாதி. ஆட்சி அதிகாரத்தை இழக்க ஒருபோதும் விரும்பமாட்டார். நாடாளுமன்றத்துக்கு தீ வைத்து விட்டு ஹிட்லர்,கம்யூனிஸ்டுகள் மீது பழிபோட்டார். அது போல பிரதமர் மோடி ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக எந்த அளவுக்கும் செல்வார். அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வந்தால் அரசமைப்புச் சட்டம் நாசமாக்கப் படும். கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மை தகர்க்கப் படும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி வேண்டி கடிதம் அனுப்பியது யார்? அது ஆளுநராக இருந்தால், அவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டும். முதலமைச்சர் கடிதம் அனுப்பியிருந்தால் அது பச்சை துரோகம். இதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும்.இயற்கை வேளாண் விஞ்ஞானி ‘நெல்’ ஜெயராமனின் மறைவு வேதனை தருகிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களின் உயிர் பாதுகாவலனை இழந்து தவிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: