சென்னை:
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு அனுமதி அளித்த மத்திய பாஜக அரசை கண்டித்தும் அந்த அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கார்நாடக மாநிலம், மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்டவும், 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.5,912 கோடியில் திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது. பிறகு, அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டது. இதற்கு மத்திய நீர்வளத்துறையும் கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்தது.
எதிர்க்கட்சிகளின் முன் முயற்சி மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் பாலாற்று பாசனத்தை நம்பியுள்ள தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக அரசும் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. அப்போது, ஆய்வுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. அணை கட்ட அல்ல என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்தது.

இந்நிலையில், மேகதாது அணை தொடர்பான செயல்திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்தது. அந்தஅறிக்கையில், அணை அமையும் இடம், அணைக்கான திட்ட மதிப்பீடு, அணையின் பலன்கள் உள் ளிட்ட பல்வேறு தகவல்களையும் முழுமையாக தெரிவித்திருந்தது. இந்த வரைவு அறிக்கைக்கு மத்
திய பாஜக அரசின் நீர்வளத்துறை ஆணையம் சமீபத்தில் அனுமதியளித்தது.

மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த நயவஞ்சக செயலுக்கு தமிழக விவசாயிகள், மக்கள், எதிர்க்கட்சியினர் , விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது.

மேகதாதுவில் அணை கட்டப் பட்டால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வருவது தடைபடும் என் பதால் தமிழக அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிறப்புக் கூட்டம் இதற்கிடையே, இந்த பிரச் சனை குறித்து விவாதிக்க சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் டிசம்பர் 6 வியாழக்கிழமையன்று மாலை 4 மணிக்கு கூடியது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.

அந்த தீர்மானம் வருமாறு:
கர்நாடக மாநில அரசு மேகதாது வில் புதிய அணை கட்டக் கூடாது என 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு களில் இரண்டு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. அதை கண்டுகொ ள்ளாமலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு கீழ் படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் கர்நாடகஅரசு எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்பதை
யும் மீறி தற்போது கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆரம்பக் கட்டப் பணி
களை துவக்க உள்ளதற்கும் மேகதாதுவில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மத்திய நீர்வளக் குழுமம் 22.11.18 அன்று அனுமதி வழங்கியதற்கும் இந்த மன்றம் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதியை திரும்பப் பெற மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று இந்த மன்றம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில் கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறு
வனங்கள் கர்நாடகாவில் உள்ள காவிரி படுகையில் மேகதாது அல்லது வேறு எந்தவொரு இடத்திலும் தமிழ்நாட்டின் அனுமதியின்றி எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று இந்த மாமன்றம் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அவர் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

குடிகெடுக்கும் மத்திய அரசு :  மு.க.ஸ்டாலின் சாடல்
இதனையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின், “மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது ‘குடிகெடுக்கும்’ செயலாகவே அமைந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: