லக்னோ:     
நாடு முழுவதிலும் பசுப் பாதுகாப்பு தொடர் பான வன்முறைகளின் எண்ணிக்கை, அதனால்  ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து ‘இந்தி
யாஸ்பெண்ட்’ செய்தி நிறுவனம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது.

அதில், இந்தியாவிலேயே, உத்தரப்பிரதேசத்தில்தான் மாட்டின் பெயரிலான வன்முறைகள் அதிகளவில் நடக்கிறது என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.வட இந்திய மாநிலங்களில்தான் பசு பாதுகாப்பு என்ற பெயரிலான வன்முறைகள் மிகுதியாக இருக்கிறது என்று கூறியுள்ள ஆய்வு, அதிலும் குறிப்பாக, “சம்பவங்களின் எண்ணிக்கையிலும், மரணங்களின் எண்ணிக்கையிலும் உத்தரப் பிரதேசம் அதில் முதலிடத்தில் உள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த வன்முறைகளில் பெரும்பாலும் இஸ்லாமியர்களே தாக்குதலுக்கு ஆளாவதாகவும், பத்தில் ஒரு நபர் தலித்தாக இருக்கிறார்” என்றும் ஆய்வு
தெளிவுபடுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.