புதுதில்லி:
இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டைக் ‘கிரிசில்’ நிறுவனம் (Credit Rating Information Services of India Limited – CRISIL) குறைத்துள்ளது.

ஏப்ரல் – ஜூன் காலாண்டில் கூட, இந்தியா 8.2 சதவிகித வளர்ச்சியை கொண்டிருந்தது. ஆனால், ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மிக மந்தமாக 7.1 சதவிகிதமாக குறைந்துள்ளது.

இந்நிலையில் கிரிசில் நிறுவனமும், 2018-19 ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 7.4 சதவிகிதமாக குறைத்துள்ளது. முன்னதாக கிரிசில் நிறுவனம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தது. தற்போது அந்த மதிப்பீட்டில் 10 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது.
பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இச்சரிவு மோடி அரசுக்கு எதிரான மனநிலையை மக்களிடையே ஏற்படுத்தி இருப்பதாகவும் கிரிசில் மதிப்பிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: