சென்னை:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் குறிப்பிட்ட கோட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இந்த மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஏற்கெனவே நவம்பர் 30-ம் தேதியிலிருந்து டிசம்பர் 5 வரை அபராதமின்றி மின்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது .

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தின் புதுக்கோட்டை, ஒரத்தநாடு கோட்டங்களில் உள்ள நுகர்வோர்களுக்கு இந்த அவகாசம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர் கோட்டங்களின் 4 பிரிவுகள், , நாகப்பட்டினம் மாவட்டத்தில் 14 பிரிவுகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து கோட்ட நுகர்வோருக்கும் இம்மாதம் 26 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டுமே என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.