எங்கெங்கு நோக்கினும் செங்கொடிகள் ஏந்திய மக்கள் திரளால் மைதானங்கள் செம்மயமாக காட்சி தருகின்றன…

இது இராஜஸ்தானின் தற்போதைய தேர்தல் களத்தில் அன்றாடக் காட்சிகள்…

அவ்வளவு பேரும் விவசாயிகள், மாணவர்கள், பெண்கள்…

CPIM-ன் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் திரளும் மக்கள் திரளைப் பார்த்து பலரது கண்களும் CPIM-ஐ நோக்கி திரும்புகின்றன…

இது ஏதோ ஒரு நாளில் பல லட்சங்களை செலவு செய்து கூட்டப்பட்ட கூட்டமல்ல…

தற்போதைய சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லையெனினும், CPIM ஒரு பொறுப்பான எதிர்கட்சியாக செயல்பட்டதற்கான பலனே இது…

இன்றும் இராஜஸ்தானின் உயிர் நாடியாக, பெரும்பாலான மக்கள் சார்ந்திருக்கும் தொழிலாக இருப்பது விவசாயமே….இன்னும் தெளிவாகச் சொன்னால் விவசாயத்தை அந்த மாநிலத்தின் எல்லா பிரிவு மக்களும் நேசிக்கிறார்கள்…

அதனால்தான், விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வருடம் நடந்த மாபெரும் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், வியாபாரிகள், பெண்கள், நகர்ப்புற மக்கள் என எல்லா தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்….

அகில இந்திய விவசாயிகள் சங்கம்(AIKS) செங்கொடியேந்தி நடத்திய அந்த போராட்டத்தில் காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட சில இடங்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு தீவிர சமூகப் பிரச்சனையாக விவசாயிகளின் பிரச்சனை கருதப்பட்டது.

22 மாவட்டங்களை முழுமையாக ஆட்கொண்ட அந்த போரட்டம்…10 மாவட்டங்களை முழுமையாக ஸ்தம்பிக்க வைத்தது…மாவட்ட தலைநகரங்களை முற்றுகையிட்ட விவசாயிகளுக்கு அந்தந்த நகரத்தில் உள்ள மக்கள், உணவு மற்றும் உதவிகளைச் செய்ததன் மூலம் எத்தனை நாட்கள் போராட்டம் நீடித்தாலும் நீர்த்து போகாத அளவுக்கு பக்கபலமாகி நின்றனர்…

இறுதியில் அரசு நிபந்தனையின்றி அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றது…போராட்டம் வெற்றி கண்டது….

இராஜஸ்தான் விவசாயிகள், செங்கொடியை தங்களின் வாழ்வை இனிமையாக்க வந்த வசந்தமாகவும் விடிவெள்ளியாகவும் எண்ணி நெஞ்சோடு அரவணைத்துள்ளனர்…அதற்கு, CPIM-ன் இத்தகைய தலையீடுகளே காரணம்…

அதுவே இன்று தேர்தல் களத்தில் அனைவராலும் ஆதரிக்கப்படும் ஒரு இயக்கமாக CPIM தலைநிமிர்ந்து நிற்கிறது….

தேசிய ஊடகங்கள், “யார் உண்மையான இந்து? யார் அடுத்த பிரதமர்… நீயா நானா? யார் அதிகம் பொய் சொல்கிறவர்? யாருக்கு தங்கள் கட்சியின் தலைவர்களின் பெயர் நன்றாகத் தெரியும்?” போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்துபவர்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை…,உண்மையான மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்துபவர்களுக்குக் கொடுப்பதில்லை…

இராஜஸ்தானிலும் அதுவே நடக்கிறது….கம்யூனிஸ்டுகளின் அதிகரித்து வரும் செல்வாக்கை இருட்டடிப்பு செய்ய ஊடகங்கள் முயலுகின்றன….இதுவரை கம்யூனிஸ்டுகளை இந்த ஊடகங்கள் தாங்கிப்பிடித்த வாரலாறு இருந்ததில்லை என்ற நிலையிலும் கூட….கம்யூனிஸ்டுகள் அதையும் தாண்டி எவ்வளவோ சாதித்திருக்கிறார்கள்…

எனவே…உண்மையான மக்கள் ஆதரவு CPIM-க்கு தேர்தலில் ஒரு அங்கிகாரத்தை பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை…!

வாழ்த்துகள்

Sadan Thuckalai

Leave a Reply

You must be logged in to post a comment.