சச்சின் சொன்னது நடந்துவிட்டது
தொடக்க நாளில் இந்திய அணி பேட்டிங் செய்ய வாய்ப்பு ஏற்பட்டால் முதல் 35 ஓவர்களை கவனமாக எதிர்கொள்ளவேண்டும்.பந்து அதிகமாக எழும்ப வாய்ப்பு உள்ளதால் தடுப்பாட்டத்தில் கவனம் தேவை என சச்சின் கூறினார்.ஆனால் இந்திய வீரர்களில் புஜாரா மட்டுமே அறிவுரையைச் செயல்படுத்தி சிறப்பாக ரன் குவித்தார்.

சமத்துப்பிள்ளையாக விளையாடிய ஆஸி., வீரர்கள்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மோதல் (ஸ்லெட்ஜிங்) ஏற்படும் என கிரிக்கெட் உலகம் அதிகம் எதிர்பார்த்தது. ஸ்லெட்ஜிங் முறையைப் பயன்படுத்துவதில் ஆஸ்திரேலியா வீரர்கள் கெட்டிக்காரர்கள் என்பதால் வம்புச்சண்டை நடைபெறும் என அடிலெய்டு டெஸ்டில் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் பெரிய அளவில் ஸ்லெட்ஜிங் செய்யாமல் சமத்துப்பிள்ளையாக விளையாடினர்.

ஏமாற்றிய அடிலெய்டு
அடிலெய்டு மைதானத்தில் புற்கள் அதிகமாக இருப்பதால் பவுன்சர் பந்துகள் அதிவேகத்தில் எகிறும் என மைதான பராமரிப்பாளர்கள் போட்டிக்கு முன்பு கருத்து தெரிவித்தனர்.அவர்கள் கூறியது போலவே பவுன்சர் எகிறியது,ஆனால் குறைந்த வேகத்தில் தான் எகிறியது.மதிய உணவு இடைவேளைக்குப் பின்பு எகிறும் வேகம் மேலும் குறைந்தது.இதனால் மூன்றாம் நாளில் ஸ்விங் எடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.