மறைந்த திராவிடர் கழக பொருளாளர் பிறை நுதல் செல்வி  மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

திராவிடர் கழகத்தின் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி நேற்று(4.12.2018)
சாலை விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றோம். திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினராக, துணைப் பொதுச்செயலாளராக, பொதுச்செயலாளராக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அவர் 2013-இல் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உதகை அரசினர் மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றிய அவர் விருப்ப ஓய்வு பெற்று, திராவிடர் கழகத்தின் முழுநேர பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.
அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட கழகத் தோழர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave A Reply

%d bloggers like this: