கோவை அருகே ஊருக்குள் புகுந்து ஆடுகளை கொன்று வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

கோவை மதுக்கரை வனச்சரக பகுதியொட்டிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக உணவுக்காக ஒற்றை சிறுத்தை ஒன்று ஆடுகளைக் அடித்து கொண்று வந்தது.இதுவரை 8 ஆடுகளைக் அடுத்து கொண்றுள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் வனத்துறையிடமும்,மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை சிறுத்தையைக் பிடிக்க கோரிக்கை வைத்திருந்தனர்.அதன் அடிப்படையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்கானித்து திட்டமிட்டு மோலப்பாளையம் பகுதி மற்றும் செம்மேடு ஆகிய பகுதிகளில் கூண்டு வைத்தனர்.கடந்த 40 நாட்களாக சிறுத்தை கூண்டுக்குள் சிக்காத நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியது.சிறுத்தையைக் தெங்குமரஹடா வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவதற்கு வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.சிறுத்தையைக் பிடித்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

Leave A Reply

%d bloggers like this: