காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே 4 வழிச்சாலையில் முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (36). இவர் லாரி ஓட்டுநராக இருந்தார். இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து லாரியில் இரும்பு லோடு ஏற்றிக் கொண்டு ஆந்திர மாநிலம் நோக்கி புறப்பட்டார். காரியாபட்டி அருகே செவல்பட்டி 4 வழிச்சாலையில் வந்த போது, முன்னால் சென்ற மற்றொரு லாரியின் டயர் வெடித்தது.

இதில், பொன்ராஜ் ஓட்டி வந்த லாரி அந்த லாரி மீது மோதியதில், பொன்ராஜ் இரு லாரிகளின் இடையே சிக்கிக் கொண்டார். தீயணைப்புத்துறையினர் வந்தும் அவரை மீட்க பலமணி நேரம் போராடினர். பின்பு, மண் அள்ளும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, லாரியின் பாகங்களை உடைத்து பொன்ராஜை மீட்டனர். ஆனால், அதற்குள் பொன்ராஜ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: