அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் ஏற்றுமதியை தடுக்கப் போவதாக ஈரான் அதிபர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செம்னான் மாகாணத்தில் நடை பெற்ற பேரணியில் தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்திய ஈரான் அதிபர் ஹஸன் ரவ்ஹானி, ஈரானிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வதை தடுக்க முற்பட்டால் வளைகுடா நாடுகளிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதியாகாது என்று அவர் திட்டவட்டமாக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்; சர்வதேச அளவில் 1980-ம் ஆண்டிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கே பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. அப்போதெல்லாம் வளைகுடா பகுதியிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என கூறப்பட்டது. ஆனால் இது வரை ஒருமுறைகூட அப்படி செய்ததில்லை என்று அவர் கூறினார்.

வாஷிங்டன் 2015-ம் ஆண்டு ஈரானுடன் போட்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது. அதுமட்டுமன்றி எண்ணெய் ஏற்றுமதி செய்ய மீண்டும் சர்வதேச தடையையும் கட்டுப்பாடுகளையும் விதித்தது. இதற்கு முன்பு கடந்த ஜூலை மாதம் இதே போன்ற எச்சரிக்கையை ரவ்ஹானி விதித்தார். அப்போது சிங்கத்தின் வாலை சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று அமெரிக்காவை எச்சரித்திருந்தார்.

ஊடகங்கள், ஈரானின் பிரச்சினைகளை பூதாகரமாக பெரிதுபடுத்தி மிகப் பெருமளவிலான பணவீக்கம், மிகப் பெரும் வேலையிழப்பு ஏற்படும் என்று அச்சமூட்டுகின்றனர். இதுபோன்ற செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.