பிரேசில்,

கர்ப்பப்பை இல்லாமல் பிறந்த பெண்ணிற்கு தானமாக கிடைத்த கர்ப்பப்பை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதுவே உலகின் இறந்த பெண்ணின் மூலம் தானமாக கிடைத்த கர்ப்பப்பை மூலம் பிறந்த முதல் குழந்தை.

மிக அரிதான வகையில் கர்ப்பப்பை இன்றி பிறக்கும் பெண்களுக்கு உயிருடன் இருக்கும் ஒருவரால் கர்ப்பப்பை தானமாக வழங்கப்பட்டு அதன் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தொழில்நுட்பம் உலகில் சிலருக்கு செய்யப்பட்டு வருகிறது. இந்த முறைக்கு உயிருடன் இருக்கும் மிக நெருங்கிய ஒருவரின் சம்மதம், இரத்த வகைகள் பொருந்துவது என பல நிலை சிக்கல்கள் இருப்பதால் அவை வெகு சிலருக்கே சாத்தியமாகிறது. ஆனால், தற்போது இறந்த ஒருவரின் கர்ப்பப்பை தானமாக வழங்கப்பட்டு பிரேசிலைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இவருக்கு கடந்த 2016ல் பிரேசிலில் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இது கடந்த சில ஆண்டுகளாக சுமார் 10 பேருக்கு நடந்த முயற்சியில் தோல்வியுற்றதாக இருந்து வந்தது. தற்போது வெற்றிகரமாக்கப்பட்டுள்ள இந்த சாதனை உலகின் பல பெண்கள் பயனடைய முன்னுதாரணமாக அமைந்துள்ளது என மருத்துவர் பலரும் கூறி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: