மேகதாதுவில் புதிய அணைக்கட்ட மத்திய அரசு கர்நாடக மாநில அரசிற்கு சாதகமாகவும், தமிழகத்திற்கு பாதகமாகவும் அனுமதி அளித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் சார்பில் திருச்சியில் இன்று மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டவும், 400 மெகாவாட் நீர் மின்சாரம் தயாரிக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஆரம்ப கட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆய்வு நடத்தவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் கர்நாடக அரசுக்கு, மத்திய மோடி அரசு அனுமதி வழங்கி உள்ளது.  மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் மோடி அரசின் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கு இந்த நடவடிக்கையை கண்டித்து, திருச்சி உழவர் சந்தை மைதானத்தில், திமுக, சிபிஎம், மதிமுக மற்றும் எதிர் கட்சிகள் சார்பில், போராட்டம் நடைபெற்றது.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் திராவிட கழக  தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ்  தலைவர் திருநாவுக்கரசர்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,  இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், உள்பட  கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்  கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்று மோடி அரசிற்கு எதிராக கண்டன  முழக்கங்களை எழுப்பினர்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.