நாகப்பட்டினம்:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கால்நடைகளுக்கு போதிய தீவனங்கள் கிடைக்காமல் திண்டாடுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கூடுதல் தீவனங்கள் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கஜா புயலில் சிக்கி ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகள், மீதமுள்ள கால்நடைகளை காப்பாற்ற பெரிதும் சிரமப்பட்டு வருவதாகக் கூறுகின்றனர்.பல கிராமங்களை இணைக்கும் சாலைப் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள்

படகுகளையே நம்பியுள்ளனர். புயலில் தப்பித்த கால்நடை களை காப்பாற்ற வைக்கோல், தீவனம் உள்ளிட்டவற்றை படகுகள் மூலமே கொண்டு வருகின்றனர்.கால்நடைத்துறை சார்பாக ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு கலப்பு தீவனம் ஒரு கிலோவும், வைக்கோல் ஒரு நாளைக்கு 3 கிலோவும் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவை போதுமானதாக இல்லை. ஒரு வீட்டில் ஒரு
மாட்டுக்கு என்ற வீதத்தில் மட்டுமே தீவனங்கள் வழங்கப்படுவ தாகவும் அந்தத் தீவனமும் முறையாக தங்களுக்கு வந்து சேர்வதில்லை .இதனால் மீதமுள்ள கால்நடைகள் பட்டினி கிடப்பதாகவும் விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அதிகளவில் தீவனங்கள் வழங்கி கால்நடைகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.