மன்னார்குடி, டிச. 3

புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள்தான் நாங்கள். நாங்கள்தான் 100நாள் இப்போ வேலையை பாத்துக்கிட்டு இருக்கோம்.  புயலுக்கு முன் ரூ.150 கூலி கொடுத்தார்கள். இப்பவாவது நிவாரணமா 200 ரூபாய்க்கு மேல் கூலியை கூட்டி பாக்கியில்லாமல் கொடுங்கள் அப்போதுதான் எங்களுக்கு  சம்பளம் ஏறவில்லை வீடுவாசலை இழந்து நிற்கும் எங்களுக்கு இப்போதாவது உயர்த்திக் கொடுப்பார்கள் என நம்பிக்கொண்டிருக்கிறோம் என பரிதாபமாக விவசாயத் தொழிலாளர்கள் கோரினார்கள். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் பாலையக்கோட்டை ஊராட்சியில் உள்ள 100 நாள் விவசாயத் தொழிலாளர்களை தீக்கதிர் செய்தியாளரும் கோட்டூர் ஒன்றியக்குழு உறுப்பினர் ஸ்டாலின் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சந்தித்தபோது இவ்வாறு உருக்கமாக தெரிவித்தனர். 100 நாள் வேலைத்திட்டத்தில் கிராமத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் புயலால் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு சட்டக்கூலியை பாக்கியில்லாமல் பழைய பாக்கியையும் சேர்த்துக் கொடுப்பதுதான் மாநில அரசின் மாவட்ட நிர்வாகத்தின் முதன்மை கடமையாகும். அம்மா பெயரில் ஆட்சி நடத்தும் அதிமுக அரசு இதையாவது செய்யுமா?

Leave a Reply

You must be logged in to post a comment.