கோபி : பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை என்று கூறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர், கோபி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:‘‘அரையாண்டுத் தேர்வு மதிப்பெண் என்பது வேறு பள்ளியிலோ, கல்லூரியிலோ சேர்வதற்கான மதிப்பீடு அல்ல. ஆகவே, புயல் பாதித்த மாவட்டங்களில் வழக்கம்போல், அரையாண்டுத் தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு உண்டு. இந்த தேர்வு இல்லை என்று கூறும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு 11.17 லட்சம் மிதிவண்டிகள் அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு தரமற்ற மிதிவண்டி எங்கு வழங்கப்பட்டாலும், அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். ஜன.1 முதல் நடுநிலைப்பள்ளிகளில் செயல்படும் அங் கன்வாடி மையங்களில், மழலையர் பள்ளிகள் தொடங் கப்படும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும். இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு பெற்ற மாணவரின் சிம்கார்டினைப் போட்டவுடன், மாற்றுச் சான்றிதழ் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.