பாரீஸ்:
கடந்த சில வாரங்கள் வன்முறை போராட்டங் களுக்கு வழிவகுத்த பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கான வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்திருக்கிறது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான அதிக வரிவிதிப்பை எதிர்த்து, கடந்த 3 வாரங்
களாக பிரான்சின் முக்கிய நகரங்களில் பெரும் போராட் டங்கள் நடைபெற்றன.
அந்த போராட்டங்களின் போது காவல்துறையினரால் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மஞ்சள்
ஜாக்கெட் அணிந்திருந் தார்கள்.

அதிக சீர்திருத்தங்களை கொண்டு வருவதாக பரப்புரை மேற்கொண்டதால், 2 ஆண்டுகளுக்கு முன்னர் இம்மானுவெல் மக்ரோன் பிரான்சின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், அவரது அரசின் நடவடிக்கைகளால் சமீபத்திய மாதங்களில் அவரது செல்வாக்கு சரிவடைந்திருக்கிறது.தன்னுடைய சீர்திருத்தங் களை தடை செய்ய இந்த இயக்கத்தை பயன்படுத்தி கொள்வதாக எதிர்க்கட்சி யினரை மக்ரோன் குற்றஞ் சாட்டியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: