தூத்துக்குடி,
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு வழங்கினா்.

ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் அமைதியான வழியில் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த மே 22ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்த மக்கள் மீது காவல் துறையினர் எதேச்சதிகார போக்குடன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைத் தொடா்ந்து ஸ்டொ்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தது.
வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் தருண் அகர்வால் தலைமையில் ஆய்வு குழு அமைத்தது. அந்த குழு ஆலையை ஆய்வு செய்த பின்னா் தங்களது அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனா். அறிக்கையில், ஸ்டொ்லைட் நிறுவனத்தை மூடியது சட்டத்திற்கு விரோதமானது. குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் ஆலையை மீண்டும் செயல்பட அரசு அனுமதித்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட மக்கள் நூற்றுக்கணக்கானோர் இன்று பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு முறையாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும். ஆலையை தமிழகத்தின் எந்த பகுதியிலும் செயல்பட அனுமதிக்கக் கூடாது. ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.