திருச்சி:
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் டிசம்பர் 4(இன்று) காலை 10 மணியளவில் உழவர் சந்தை திடலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.