திண்டுக்கல், டிச.2
திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பில் நடைபெற்ற கார் விபத்தில் 4 பேர்
பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள.
கர்நாடக மாநிலத்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கு ஒரு திருமண விழாவிற்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திண்டுக்கல் அருகே சென்று கொண்டிருந்த போது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹரீஸ், லேகேஷ், மஞ்சுநாதன், பாபு  ஆகிய 4  பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதைத்தொடர்ந்து லாரி ஓட்டுநர் மாரி முத்துவை தாடிக் கொம்பு காவல் துறையினர் கைது   செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.