உத்திரபிரதேச மாநிலத்தில் ராணுவ வீரரின் தந்தை முகமது இக்லாக் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி  சங்பரிவார் கும்பல் அடித்து படுகொலை செய்தது. அதனை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் தற்போது மீண்டும்  சங்பரிவார் கும்பலால் அடித்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இச்சம்பவம் உ.பி. காவல்துறை மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தின் கவுதம புத்தர் மாவட்டம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி இரவு பசுவை பலி கொடுத்து அதன் இறைச்சியை முகமது இக்லாக் (58) குடும்பத்தினர் சாப்பிட்டதாக ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் கும்பல் முதலில் வதந்தியை பரப்பியது. அதனை தொடர்ந்து  200 பேர் கொண்ட கும்பல் இக்லாக் வீட்டுக்குள் புகுந்து அவரை அடித்தே கொன்றது.  இந்த வழக்கை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி சுபோத் வர்மா அங்கிருந்த இறைச்சியை பரிசோதனைக்கு அனுப்பினார். அதில் இக்லாக் வைத்திருந்தது ஆட்டு கறி என தெரிய வந்தது. இதையடுத்து விசாரணை அதிகாரியாக இருந்த சுபோத் குமார்சிங் யோகி அதித்யாநாத் அரசு இடமாற்றம் செய்தது.

அதன் பின்னர் காவல் அதிகாரி சுபோத் குமார் சிங்  உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் மாவட்டம் சியான பகுதியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் திடீரென  ஹிந்து யுவா வானி, பஜ்ரங்தள், பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட  அமைப்பினர் பசுமாடு இறந்து கிடைக்கிறது. இதனை சிலர் அடித்துதான் கொன்றிருக்கின்றனர் எனக் கூறி திடீரென மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற காவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் மறியலில் ஈடுபட்ட சங்பரிவார் கும்பலோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில்  திடீரென அந்த கும்பல் சுபோத் குமார் சிங் மீது தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த காவல் நிலையத்தையும் தீவைத்து எரித்திருக்கின்றனர்.

அதில் அவரை தூக்கி போட முயற்சி செய்த போது, அவரை சக காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அப்போது அவர் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்திருக்கிறது. இதையடுத்து கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கின்றனர். இதில் கலவர கும்பலை சேர்ந்த ஒரு இளைஞர் உயிரிழந்திருக்கிறார். இதனை மையமாக வைத்து தொடர்ந்து அப்பகுதியில் மதக்கலவரத்தில் சங்பரிவார் கும்பல் ஈடுபட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.

ஆனால் இந்த கலவரம் பற்றி  எந்த கவலையும் கொள்ளாமல் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத் ராஜஸ்தான் தேர்தலை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்ற கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது. மேலும் இந்த கலவரம் திட்டமிட்டு இந்து மதவெறி கும்பலால் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.  இந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்.

ஹேமந் கார்க்கரே படுகொலை
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள மாலேகான் பகுதியில், 2008ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஆறு பேர் பலியாகினர்; 101 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் தொடர்புடைய இந்து தீவிராவத அமைப்பினர் ஈடுபட்டிருப்பதை தீவிரவாத தடுப்பு பிரிவு உறுதி செய்தது. அந்த விசாரணையை தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவராக இருந்த நேர்மையான அதிகாரி  ஹேமந்த் கார்க்கரே மேற்கொண்டார். பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், குண்டு வெடிப்பில் தொடர்புடைய  முன்னாள் ராணுவ அதிகாரி, பிரசாத் புரோஹித், பெண் சாமியார் பிரக்யா தாக்கூர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
அவர் மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த புல்லட் புரூப் டிரஸ் தரம் குறைந்ததாகவும், துப்பாக்கி குண்டுகளை தடுத்து நிறுத்தும் சக்தி இல்லாதாகவும் இருந்ததும், அவரை எப்படி யார் எந்த இடத்தில் வைத்து சுட்டு கொன்றனர் இன்று வரை தெரியாத மர்மமாக இருந்து வருகிறது. அவரது மனைவி ஹேமந் கார்க்கரே மரணம் குறித்து தனது சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.

நீதிபதி லோயா மரணம்
பாஜக தலைவர் அமித்ஷா தொடர்புடைய என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்தார். இந்த கொலை ஒரு திட்டமிட்ட சதி, அதில் ஆர்எஸ்எஸ் தொடர்பு இருப்பதாக பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கை  நேர்மையாக விசாரிக்க வேண்டும் என தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன்கோயா, மற்றும் மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பீமராவ் லோகுர் ஆகியோர் வலியுறுத்தினர். தற்போது அந்த வழக்கை விசாரிக்க எந்த நீதிபதிகளும் முன்வராமல் மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சங்பரிவார் கும்பலால் திட்டமிட்டு கலவரத்தை எற்படுத்தி  அந்த கலவரத்தை பயன்படுத்தி  அக்லாக் படுகொலையை  விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி  சுபோக் குமார் சிங் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.