திருச்சிராப்பள்ளி : தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 1.6.2009 பிறகு பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் வெள்ளியன்று மாலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணை ப்பாளர்கள் கென்னடி, நீலகண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பெரியசாமி துவக்கவுரையாற்றினார். தியாகராஜன், அசோகன், மணிமாறன், நாகராஜன், இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் லெட்சுமணன் நிறைவுரையாற்றினார். உதுமான்அலி நன்றி கூறினார்.

கரூர்
இதே போல் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ மாவட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகாவிஷ்ணன், குமரவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் மு.சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.சக்திவேல், கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பொன் ஜெயராம், பல்வேறு அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் சரவணன், திருநாவுக்கரசு, ஜெயராஜ், பெரியசாமி, சாந்தி, செல்வராணி, கிருஷ்ணகுமாரி, சகிலா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தயாளன், செயலாளர் குமரி ஆனந்தன், பொருளாளர் சிவக்குமார், சாலைப் பணியாளர் சங்க சுப்ரமணி உள்பட ஜாக்டோ- ஜியோ அமைப்பில் இணைந்து உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்களும், அரசு ஊழியர் சங்கங்களும், அரசு துறைவாரி சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.