நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் சனிக்கிழமையன்று இரவு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கஜா புயல் நிவாரணத் துக்காக 392 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் கையிருப் பில் உள்ளது. இன்று முதல்,நிவாரணத்தொகை வழங் கப்படும் . நாகப்பட்டினம் மாவட்டத்தில், கஜா புயலினால் பாதிப்படைந்த பகுதிகளில் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நடைபெற்று அவை 3 கட்டமாக ஆய்வு செய்யப்பட்டு, கணினி மூலமாக உடனுக்குடன் சூழற்சி முறையில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்படும். இதன்படி, குடிசைகளை இழந்தவர்களுக்கு முதலிலும், ஓட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இரண்டாவதாகவும், பகுதியளவு வீடுகளை இழந்தவர்களுக்கான நிவாரணத் தொகையும், மாநில அரசின் கையிருப்பில் உள்ள 392 கோடி ரூபாயில் இருந்துவழங்கப்படும் என்று தெரிவித்தார்.  கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட நிவாரணமாக போய்ச் சேரவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக அரசை கண்டித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: