உதகை,
நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறையின் சார்பில் ஆனைகட்டி கிராமத்திலுள்ள பழங்குடியின விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனக் கருவிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்டஆட்சியர் இன்னசென்ட் திவ்யா 47 பழங்குடியினருக்கு ரூ.5.2 லட்சம் மதிப்பிலான நுண்ணீர் பாசனக் கருவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, மத்திய, மாநில அரசுகளின் சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பழங்குடியினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராமப்புற தனி நபர் மற்றும் பொதுச்சொத்துகளை உருவாக்குதல் போன்ற விவசாயிகள் பயனடையக் கூடியத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.தொடர்ந்து வேளாண் பொறியியல் துறையின் மானியத் திட்டங்கள் குறித்து வேளாண் உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் விளக்கினார். இதையடுத்து நுண்ணீர் பாசனக் கருவிகள் இயக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தோட்டக்கலை துணை இயக்குநர் மீராபாய் வரவேற்றார். உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: