ஈரோடு,
சுமைதூக்கும் தொழிலாளர்களின் வேலை உரிமைப் பாதுகாப்பு மாநாடுவெள்ளியன்று ஈரோட்டில் நடைபெற்றது.

சுமைதூக்கும் தொழிலாளர்களின் வேலை உரிமைப் பாதுகாப்பு மாநாடு ஈரோடு பெரியர் மன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. சிஐடியு சுமைப்பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் எம்.அர்த்தநாரி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பொருளாளர் ஆர்.ரங்கநாதன் வரவேற்புரையற்றினார். அண்ணா சுமைதூக்குபோர் சங்க பொதுச்செயலாளர் வி.தெய்வநாயகம், சிஐடியு சுமைப்பணியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ப.மாரிமுத்து, சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஆர்.ரகுராமன், துணை செயலாளர் என்.முருகையா, சுமை தூக்குவோர் மத்திய சங்க தலைவர்கள் எ.விஜயகுமார், பி.செல்வம், தமிழக பொதுத் தொழிலாளர் சங்கம் (டிபிடிஎஸ்) பொதுச்செயலாளர் பாஸ்கி என்ற பாஸ்கர், மாவட்ட தலைவர் தர்மலிங்கம், துணைத் தலைவர் இளையராஜா, துணைச் செயலாளர் மகேந்திரன், வேணுகோபல், ஜீவா, சுமைதூக்குவோர் சங்க (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் செல்வம் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினர். இதைத்தொடர்ந்து சங்க தலைவர் டி.தங்கவேல் வேலை உரிமைப் பாதுகாப்பு மாநாட்டு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதில் அவரவர் வேலையை அவரவர் செய்து வருவதற்கு ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தை மாவட்ட நிர்வாகம் மேம்படுத்தி வேலைப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்திட வேண்டும். தொழிலாளர் பிரச்சனைகளை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாற்றும் வகையில் நிறுவனங்கள் தொடுத்த வழக்குகளில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளையும், வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.